அதிகார வர்க்கம் ,இழைக்கும் அநீதிகளை களைய பொதுமக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்ரசாதம் பொது நல வழக்குகள்.
குல்டிப் நாயர் ஜனநாயகத்துக்கான குடிமக்களின் அமைப்பின் தலைவர் ஆக அனுப்பிய கடிதத்தையே ” தடா” சட்டம் எப்படியெல்லாம் தவறாக பயன் படுத்தப் பட்டது என்பதை பொது நல வழக்காக மாற்றி வெளிச்சம் போட்டு காட்டியது உச்ச நீதி மன்றம்.
அதே நேரத்தில் குஜராத்தில் அஸ்பெஸ்டாஸ் பயன்பாடு மக்களுக்கு தீங்கானது என்பதால் அதை தடை செய்ய கோரும் வழக்கு உண்மையில் அஸ்பெஸ்டாஸ் பொருளுக்கு மாற்றான பொருளின் உற்பத்தியாளர்கள் தூண்டி விட்டுதான் அந்த வழக்கு பதிவானது என்பது வெளிப்பட்டவுடன் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தது.
எனவே இந்த அதிகாரம் தவறாக பயன் பயன்படுத்தப் பட்டு விடக் கூடாது என்பதற்காக நியாயமான கட்டுபாடுகளை விதிப்பது சரிதான் .
ஆனால் வழக்கு தொடுப்பவர்கள் வருமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், பான் அட்டை என்ற வருமான வரி இலாகா தரும் அட்டையை தாக்கல் செய்ய வேண்டும், வழக்கறிஞர் மூலம்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை மட்டுமல்ல சட்டப்படி நிற்கத் தக்கவை யுமல்ல. . இவைகளை செல்லாதது என அறிவிக்கச் செய்ய கோரிய மனுக்களை டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பு தள்ளுபடி செய்தது சரியல்ல.
உச்ச நீதி மன்றம் தலையிட்டு இந்தக் குளறுபடிகளை நீக்க தக்க வழிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும்.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)