லஞ்சமும் அராஜகமும் சட்ட மன்றம் முதல் ஊராட்சி மன்றம் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது.
நேற்றையtn தினம் ஒளிபரப்பான கோவை மாநகராட்சி கூட்ட நிகழ்ச்சியை பார்த்தவர்கள் திடுக்கிட்டார்கள். .
ஆம். ஒரு பெண் உறுப்பினர் மாநகராட்சி அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுடன் தான் நெற்றியில் நாமத்தை போட்டுக் கொண்டு மாமன்ற கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.
அவரை ஆளும் கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் பாய்ந்து பாய்ந்து அடித்ததை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப்பின.
அடிபட்டவரை தி.மு.க. வின் மற்றவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.
மாலை செய்தி வருகிறது. தாக்கப்பட்ட உறுப்பினர் அடுத்த மூன்று கூட்டங்களுக்கு வரக்கூடாது என்று மாநகர மேயர் உத்தரவிட்டிருக்கிறார். தாக்கியவர் மீது எந்த நடவடிக்கையும் , ஏன் , எந்த விசாரணையும் இல்லை.
இதே ஆளும் கட்சிக்காரர்கள்தான் சட்ட மன்றத்தில் தே.மு,தி.க. உறுப்பினர்கள் இடையூறு செய்தார்கள் என்று கூட்டத் தொடருக்கே வரக்கூடாது என்று தடை போட்டவர்கள்.
எதிர்கட்சிகள் பேசினால்தான் ஜனநாயகம் வாழும். இன்றைய ஆளும் கட்சியினர் எப்போதும் இப்படியே இருக்கப் போவதில்லை.
நாளை இவர்களும் எதிர்க் கட்சி ஆகலாம்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)