கோவில்கள் மடங்களுக்கு கொடுக்கப் படும் மாடுகள் யானைகள் உள்ளிட்ட விலங்குகளை பராமரிப்பது குறித்து ஒரு பொது நல வழக்கை ராதா ராஜன் என்ற ஒரு பெண்மணி வழக்கு தொடுத்திருந்தார்.
பராமரிக்க வசதியில்லாத திருவிடை மருதூர் மகாலிங்க சாமி கோயில் யானையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்ட உயர் நீதி மன்றம் ஸ்ரீ ரங்கம் கோவிலில் உள்ள யானையை நடனமாட விட்டு கொடுமைப் படுத்தும் காட்சிகளை விடியோ காட்சிகளாக பார்த்து விட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது .
இந்த ராதா ராஜன் தான் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாதென்று சர்வ தேச அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு உதவிகளைப் பெற்று போராடிக் கொண்டிருப்பவர்.
ஏன் இவர் கோவிலில் யானைகளை வைத்திருப்பதே கொடுமைப் படுத்துவதுதான் . அவைகளை அப்புறப் படுத்தி காடுகளில் விட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வில்லை?
ஏனென்றால் அவை கோவில் சம்பத்தப் பட்டவை. அவர்கள் பிழைப்பு கெடக் கூடாதல்லவா??!!