மன்னராட்சிகள் மறைந்தாலும் இன்னும் சில நாடுகளில் மன்னராட்சி பெயரளவுக்கு தொடர்கிறது. அதில் முக்கியமான நாடு தாய்லாந்து.
70 ஆண்டுகள் நாட்டை ஒன்று படுத்திய சக்தியாக மன்னர் ஒருவர் திகழ்ந்தார் என்பதே அரிதான விடயம்.
மக்களாட்சியும் மன்னராட்சியும் எப்படி இணைந்து செயல் பட முடியும் என்பதற்கு தாய்லாந்து சாட்சி.
மன்னர் ஒன்பதாம் ராமர் என்பது அவர் அறியப் பட்ட அடையாளம்.
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் உள்ள வரலாற்று பிணைப்பு மேலும் வலுவடையும் .
பிரதமர் கான் அறிக்கையில் இப்போது மன்னர் சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் அங்கிருந்தவாறு தாய்லாந்து மக்களை பார்த்துக்கொள்வார் என்று அறிவித்திருப்பதில் இருந்தே அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொள்ளலாம்.
ஆள்வோர் மீது மக்கள் காட்டும் அன்பு இயற்கையானது என்பதை எப்படி உணர்வது? அவர்கள் மறையும்போது மக்கள் காட்டும் இதயமார்ந்த அஞ்சலியே அதற்கு சாட்சி.
மக்கள் ஆதரவு இருப்பதால்தான் அவரது மகன் மகா வஜ்ர லோங்கோன் புதிய மன்னராக பதவியேற்கிறார்.