மூன்று மாணவிகளை பலி வாங்கிய தண்ணீர் லாரி ?!!

3 students died

சென்னை கிண்டியில் ஒரு குடிநீர் லாரி கட்டுபாட்டை இழந்து ரோட்டில் சென்று கொண்டிருந்த மூன்று மாணவிகளை பலி வாங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு

உள்ளாக்கியிருக்கிறது.

சென்னை குடிநீர் வாரியம் ஒப்பந்த குடிநீர் லாரிகள் மூலமாக தினமும் 4000 -5000  நடைகள் இயக்கி 83 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இவைகள் பெரும்பாலும் பகலிலேயே இயக்கப் படுகின்றன.

நிபந்தனைகள் பல விதிக்கப்  பட்டாலும் அவைகள் அனுசரிக்கப் படுகின்றனவா என்பது ஆய்வுக் குரியது.

நாற்பது கி மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்ற விதிமுறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்  படுவதில்லை.

அந்தப் பெண்களின் குடும்பத்தினர் கண்ட கனவுகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன.

எல்லா வாகன விபத்துக்களையும் போல இதையும் ஒன்றாக பாவிக்காமல் சிறப்பு கவனம் எடுத்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் இனியாவது தண்ணீர் லாரிகளின் இயக்கத்தை கடுமையான கண்காணிப்பிற்கு ஆட்படுத்துவது அரசின் கடமை.