இந்த நாளில் மேதகு பிரபாகரனின் வீர உரையைக் கேட்க உலகமே ஆவலுடன் காத்திருந்த காலமொன்று இருந்தது.
அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயங்கள் எல்லாம் எழுச்சி பெற காரணமாக இருந்த உரை அது.
ஆயுதங்கள் நாங்கள் எடுத்தவை அல்ல. எங்கள்மீது திணிக்கப் பட்டது என்பதை அவர் அடிக்கடி நினைவூட்டுவார்.
அறப்போராட்டங்கள் எல்லாம் சிங்கள இனவாதிகள் முன்பு செயல் இழந்தன. உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள்..
போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் அரசியல் தீர்வைப் பற்றி பேசக் கூட அங்கு யாரும் தயாராக இல்லை.
மாவீரர் தினம் தடை செய்யப் பட்டிருக்கிறது. அதையும் மீறி யாழ்ப்பாணத்தில் மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.
இலங்கைத்தீவு முழுதும் இன்று நிலவும் மயான அமைதி நிரந்தரமல்ல. என்று தமிழர்கள் சம உரிமை பேச ஆரம்பிக்கிறார்களோ அன்று அவர்கள்மீது மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்.
உலகம் தலையிட்டு எந்த நாட்டிலும் விடுதலை கிடைத்ததில்லை.
போராடுபவ ர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அது.
மீண்டும் அறவழிப் போராட்டத்தை துவங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஈழத் தமிழினம்.
போராட வேண்டிய மன நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய நாள் இது.
பிரபாகரனுக்கு தர வேண்டிய மரியாதையை தமிழினம் இன்னும் தரத் தொடங்க வில்லை.
அந்த நாள்தான் தமிழர் எழுச்சி பெற்றார் என்று உலகம் உணரத் தொடங்கும் நாள்.