பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்- குருமூர்த்தி சொல்கிறார்??!!

gurumoorthi

பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்-   குருமூர்த்தி சொல்கிறார்??!!

செல்வாக்கு இல்லாவிட்டாலும் தன் எடுபடாத கொள்கைகளை சொல்லிக்கொண்டே இருப்பது பார்பனீயம்.    என்றாவது வெல்வோம் என்ற நம்பிக்கையில்.

அதைப்போல் தான் சோ வுக்குப் பின் துக்ளக் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி எடுபடாத வாதங்களை நம்புகிற மாதிரி முன் வைக்கிறார்.

ஒரு கோடி பேர் சபரிமலைக்கு செல்கிறார்களாம்.   மாதம் இரண்டரை லட்சம் பேர் பழனி போகிறார்களாம். மேல்மருவத்துருக்கு முப்பது லட்சம் பேர் செல்கிறார்களாம்.    இந்த இந்துக் கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டார்களாம். தலைவர்களை விட கடவுள்களை தான் மக்கள் நம்புகிறார்கள். கடவுளைத்தான் தலைவராக பார்கிறார்கள். தலைவரை கடவுளாக பார்க்கவில்லை.   இதுதான் குருமூர்த்தியின் மதிப்பீடு.

குருமூர்த்தி சொல்லும் பக்தர்களில் எத்தனை பேர் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை குருமூர்த்தி சொல்வாரா?

வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?     பக்தர்களிடம் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பை நடத்த தயாரா?

தன் துன்பங்களில் இருந்து விடுபட  அப்பாவி பக்தன் வேறு வழியின்றி பார்ப்பான்  மணியாட்டி இறைத்தொண்டு செய்வதை ஏற்றுக் கொள்கிறானே தவிர மனப்பூர்வமாக அல்ல.

மாற்றங்களை கொண்டுவர அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவர்கள் தான் அனைவரும்.

ஒரு சத விகிதம் கூட பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒப்புக் கொள்பவர்கள் அல்ல.  சம்பிரதாயம் ,விதி என்று கட்டாயப் படுத்தப் பட்டே பார்ப்பனீய ஆதிக்கம் திணிக்கப் படுகிறது.

இதை வைத்து மீண்டும் அரசியல் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர்கள் திட்ட மிடுகிறார்கள்.

ராம் மோகன் ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு இருக்கிறார். கிலோ கணக்கில் தங்கம் கோடிகோடியாக பணம் கைப்பற்றப் பட்டிருக்கிறது.  விசாரணை செய்து சிறையில் போடட்டும்.    ஆனால் தினமலர் அவரை பற்றி செய்தி வெளியிடும் போது அவன் இவன் என்று எழுதுகிறதே  எந்த பார்பானாவது மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனால் அப்போது அவனை அவன் இவன் என்று எழுதுவாயா?       காஞ்சி சங்கராச்சாரியார் கொலைக குற்றச்சாட்டில் சிறைக்குப் போனபோது அவன் இவன் என்று எழுதினாயா?

எப்போதையும் விட இப்போதுதான் பெரியார் தேவைப் படுகிறார்.    அவரது சிந்தனை தேவைப்  படுகிறது.

பெரியார் மற்றும் எம் ஜி ஆர்  நினைவு நாளான இன்று பார்ப்பனீய ஆதிக்கம் மீண்டும் வேருரான்றமல் விழிப்புடன் செயலாற்ற சூளுரைப்போம்.