பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு அதை சாமானியர்களின் தலையில் சுமத்தவே இந்த செல்லாக்காசு அறிவிப்பு என்று மத்திய அரசை குற்றம் சொல்லி வருகிறார்கள்.
அதை மெய்பிக்கும் வகையிலேயே மத்திய அரசின் அரசின் நடவடிக்கை இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு வாராக் கடன்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.
14 பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16 நிதியாண்டில் இழப்பை சந்தித்துள்ளன. இழப்பை சரிக்கட்ட கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதால் நிலைமை எவ்வளவு சீராகும் என்பது தெ ரியவில்லை.
மதிப்பீடுகளின் படி இந்த வராக் கடன் அளவு அடுத்த ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. 2017 மார்ச் மாதத்திற்குள் 9.8 % அளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அடுத்த சில காலாண்டுகளில் பல பொதுத்துறை வங்கிகள் லாப பாதைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு.
வாராக் கடன்களின் அளவுக்கும் செல்லாக் காசு நடவடிக்கைக்கும் தொடர்பு இருக்கிறது.
பெருந்தொகை கடன் காரர்கள் பட்டியலை அரசு வெளியிட்டால்தான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.