சமீபத்தில் நடந்த அதிகாரப்போட்டியில் யாரும் எதிர் பாராதது முலாயம் சிங் யாதவை அவரது மகனே வீழ்த்துவார் என்பது.
கட்சியைக் காப்பாற்ற தந்தையை விலக்கி வைத்து உள்ளதாக நியாயம் கற்பித்தாலும் அது தொண்டர்கள் முன் எடுபடுமா என்பது இனித்தான் தெரிய வரும்.
உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கும் இந்த அரசியல் வரலாறு பலமுறை கண்டதுதான்.
மாமனார் என் டி ராமராவை தோற்கடித்து விட்டுதான் முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.
சொந்த சகோதரனை கொன்று விட்டுத்தான் ஆட்சியை பிடித்தான் அவுரங்கசீப் .
ஆனாலும் சோஷலிச கருத்துக்களை அடி மட்டத் தொண்டன் முதல் வரை பாய்ச்சி வைத்திருக்கும் சமாஜ்வாடி கட்சி இந்த முறை ஆட்சியை இழக்குமானால் அது பா ஜ க ஆட்சிக்கு வர வழி வகுக்கலாம் .
அது உள் கட்சி குழப்பங்களால் தான் முடியும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.