சிறைக்குப் போகிறார் சசிகலா!!
முதல்வர் கனவு கனவாகவே போய் விட்டது.
ஜெயலலிதா இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார்.
எட்டு மாதம் கழித்து , தமிழக அரசியலில் ஒரு பிரச்னை உருவாகி, சசிகலா முதல்வர் ஆக தேர்வு செய்யப் பட இருந்த நிலையில், ஓ பி எஸ் தனி அணி கண்டு ராஜினாமாவை கட்டாயப் படுத்தி வாங்கினார்கள் என்று குற்றம் சாட்டிய நிலையில் , உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா , சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று விசாரணை நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்திருக்கிறது.
தீர்ப்பு பொதுவாக வரவேற்பை பெற்றாலும் தாமதம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
விடுதலை செய்து தீர்பளித்த நீதிபதி குமாரசாமிக்கு கண்டனம் தெரிவித்ததா என்று தெரிய வில்லை. கணக்கு தப்பு என்பது உண்மைதானா?
ஜெயலலிதா ஆட்சிக் காலம் என்பது ஊழல் ஆட்சிக் காலமே என்பது இதன் மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
கொண்டாடப் பட வேண்டிய ஆட்சியை ஜெயலலிதா நடத்த வில்லை.
அதிமுக என்பதே ஜெயலலிதாவின் கட்சிதான்.
எம்ஜியார் காலத்தில்தான் அது கலைஞர் எதிர்ப்பு கட்சியாக இருந்தது. அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை தன் கட்சியாகவே வைத்திருந்தார்.
அவருக்குப்பின் கட்சி நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு என்ன பதில்?
ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று பிரிந்து போட்டியிட்டவர்கள் தான் இவர்கள்.
ஆளுநர் தாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றாகி விட்டது. பதவி ஏற்றிருந்தால் உடனே விலக வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும்.
மீண்டும் ஒரு பொது தேர்தலை நோக்கி தமிழ் நாடு செல்கிறது தெரிகிறது.;
ஓ பி எஸ் ஆதரவு அதிமுக இந்த தீர்ப்பை கொண்டாடுவதன் பொருள் என்ன.? ஜெயலலிதாவிற்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. சசிகலா தடுக்கப் பட வேண்டும் .
விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் அரசியல் எப்படி இருக்கும் என்பது இப்போது விளங்கிவிட்டது.
டெல்லி நினைத்தால் எந்த மாநிலத்திலும் தங்கள் விருப்பபடி அரசியலை மாற்று திசையில் திருப்ப முடியும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது.
பா ஜ க கால் பதிக்க தன் ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி வருகிறது.
விழிப்புணர்வு கொண்ட சமுதாயமாக மாறினால்தான் இந்த அவலங்களை தவிர்க்க முடியும்.