உணவுகலப்படங்களில் பல வகைகள் இருக்கின்றன.
எடை கூடுவதற்காக உட்கொண்டாலும் பெரிதாக உடலுக்கு ஊறு விளைவிக்காத இதர பொருட்களை கலந்து லாபம் சம்பாதிப்பவர்கள். அரிசியில் கல் கலப்பதை கேள்விபட்டிருக்கிறோம். எடை கூட்டி விற்றாலும் கல் பொறுக்கும் வேலை மட்டுமன்றி தவறி உள்ளே போனால் பல உபாதைகளும் உருவாக்கும்.
சமீப காலமாக குற்றவியல் நீதிமன்றங்களில் உணவு கலப்பட வழக்குகள் பதிவாவதே இல்லை. அரசு காட்டும் அலட்சியம் கலப்படகாரர் களுக்கு ஊக்கம் தரும் வகையில் இருக்கிறது.
தவறு செய்பவர்களுக்கு பயம் காணாமல் போக அரசு காட்டும் அலட்சியம் மிக முக்கிய காரணம்.
அரிசியில் பிளாஸ்டிக் கலந்ததை நிரூபிக்கும் வகையில் சமைத்த பிளாஸ்டிக் அரிசியை பந்தைபோல் \உருட்டி விளையாடும் காட்சி வலை தளங்களில் பிரபலமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அரிசி கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லாததால் இங்கு பிளாஸ்டிக் அரிசி பேச்சுக்கே இடமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி கொடுக்கிறார் .
ஆந்திராவிலும் தெலுங்கானவிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குற்றச்சாட்டில் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் சர்க்கரையில் பிளாஸ்டிக் கலந்து விற்பனை என்ற குற்றச்சாட்டு எழுந்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
சாதாரணமாக டீ , காப்பி பொடிகளில் கலப்படம்தான் இதுவரை அதிகம் பேசப் பட்டு வந்தது. இப்போது அரிசி சர்க்கரையிலும் பேசப் படுவது கொடுமையின் உச்சகட்டம்.
அரசுகளின் மெத்தனப் போக்குதான் இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம்.
மக்களின் விழிப்புணர்வும் மேலும் கூட வேண்டும்.