ஓட்டுப்போட பணம் வாங்கியதாக எம் எல் ஏக்கள் மீது குற்றச்சாட்டு!! விசாரணை அவசியம் வேண்டும் !!!

இதுவரை இல்லாத வகையில் சசிகலா அணி அமைச்சரவை  மீது நம்பிக்கை வாக்கு பெற வேண்டிய சூழ்நிலையில் கூவத்துரில் தங்க வைக்கப் படுவதற்கு முன் எம் எல் ஏக்களுக்கு  இரண்டு முதல் பத்து கோடி வரை பேரம் பேசப் பட்டதாக இரண்டு எம் எல் ;ஏக்கள் பேசுவதாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் என்ற நடவடிக்கை வெளிப்படுத்தியது.

இன்று சட்ட மன்றம் கூடியபோது இது பற்றி விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.

அ தி மு க தரப்பு அமைதியாக அமர்ந்திருக்க தி மு க மட்டும் விவாதம் நடத்த கேட்டு போராடியது.

வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.      ஏன் அவர்களிடம் ஒரு வாக்குமூலம் பெறுவதைகூட தடுக்க வேண்டும்?

மூன்று அணியாக அ தி மு  க  மாறிய பிறகு அதன் ஸ்திரத் தன்மை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

பா ஜ க வின் கைப்பாவையாக மாறிவிட்ட அ தி மு க அரசு எப்போது  வேண்டுமானாலும் கவிழலாம்.

கவிழ்கிறதோ ஆள்கிறதோ  பண ப்  பேரம் விசாரிக்கப் பட்டே ஆக  வேண்டும்.