பாஸ்போர்ட்டில் இந்தி சேர்ப்பு; தமிழிலும் கொடு !!!

பாஸ்போர்ட்டில் இனி இந்தியும் இடம் பேரும் என்று வெளிஉறவு த்துறை அறிவித்துள்ளது.

அதாவது  குடிமக்கள் குறித்த ஆங்கில விபரங்களுக்கு அருகில் தங்கள் விபரங்களை தேவநாகரி வடிவிலும் இடம் பெற செய்யலாம் என அறிவித்துள்ளது.

தேவநாகரி என்று இந்தியை மட்டும் ஏன் சேர்க்க வேண்டும்?   இந்தியை சேர்க்க முடியும் என்றால் மற்ற மொழிகளையும் சேர்க்க முடியும்தானே?

குறைந்த பட்சம் அந்தந்த மாநில மக்களுக்கு அவரவர் மொழிகளில் கூடுதல் விபரங்களை சேர்க்கும் வாய்ப்பை அளிப்பது அவசியம்.   அதுதான் இந்தியம்.    மறுத்தால் ஹிந்தியம்.

ஆங்கிலம் மட்டும் போதாது என்று மத்திய அரசு கருதினால்     22   இந்திய மொழிகளையும் இணைக்கட்டும். ஆனால் அது இந்தி மட்டும்தான் என்றால் மற்ற மொழிக்காரர்கள் இரண்டாம் தர குடிமக்களா என்ற கேள்வி எழுவதை  தடுக்க முடியாது.

இந்தியை எல்லா வகையிலும் திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.

கொடுமை என்னவென்றால் ஆந்திராவின் வெங்கையாவும் இந்தி  கற்காமல் வளர்ச்சி இல்லை என்று பேசுகிறார்.

மும்மொழிக் கொள்கை என்பது காகிதத்தில்தான்  இதுவரை இருந்து வருகிறது.   எந்த வட மாநில மக்களும் எந்த தென்னிந்திய மொழியையும் கற்றதாக  தெரியவில்லை.

இந்தித் திணிப்பு குற்றங்களை மத்திய அரசு கூட்டிக் கொண்டே போகிறது.

விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கு வலு கூட்டுவதாக அமையாது என்பதை இவர்கள் உணரும் காலம் வந்தே தீரும் . !!!