கடைசி வரை நம்பிக்கை தந்தார்கள். கடைசியில் கழுத்தறுத்தார்கள்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு ஓராண்டு விலக்குக்கு மட்டும் அவசர சட்டம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்றார். அவசர சட்டம் இயற்றினார்கள். ஒப்புதல் தரவில்லை குடியரசுத் தலைவர். இதுதான் பா ஜ க. அவர்கள் மாறமாட்டார்கள். நம்பும் நாம்தான் ஏமாற வேண்டும்.
இன்று வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டம் என்ன ஆயிற்று என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
தமிழக பாடத் திட்டத்தில் படித்து 98 to 99.3 % மார்க் வாங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் போதிய மார்க் வாங்க முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு கலைந்து கலங்கி நிற்கிறார்கள்.
புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுகின்றன.
இரட்டை இருப்பிட சான்றிதழ்கள் மூலம் வெளி மாநிலத்தவர் மருத்துவ படிப்பில் இடம் பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
வரும் காலங்களில் பாடத்திட்ட மாற்றங்கள் பயிற்றுவிக்கும் முறையில் மாற்றங்கள் எல்லாம் இணைந்து நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் நாம் மாணவர்களை பயிற்று விக்க வேண்டும்.
பா ஜ க அரசு தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு நீட் விலக்கு தொடர்பாக மோடி அரசு நடந்து கொண்ட முறை சாட்சியாக நிலைத்து விட்டது.