சுஷ்மா ஸ்வராஜ் , பார்ப்பனர்
அருண் ஜைட்லி , பார்ப்பனர்
நிதின் கட்கரி, பார்ப்பனர்
சுரேஷ் பிரபு , பார்ப்பனர்
மேனகா காந்தி ,பிறப்பால் சீக்கியர் மண உறவால் பார்ப்பனர்
அனந்தகுமார் , பார்ப்பனர்
பிரகாஷ் ஜவடேகர், பார்ப்பனர்
நிர்மலா சீதாராமன் , பார்ப்பனர்
அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. 28 பேர் கொண்ட நரேந்திர மோடியின் காபினட் அமைச்சர்களில் இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள்.
ஆனால் எந்த பத்திரிகையும் இவர்களது சாதி அடையாளத்தை எழுத மாட்டார்கள். ஒரு யாதவ் , தலித் , ஜாட், மற்ற எந்த சாதியாக இருந்தாலும் எத்தனை பேர் அந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று பட்டியல் இட்டு எழுதும் ஊடகங்கள் பார்ப்பன சாதியை மட்டும் பட்டியல் இட்டு ஏன் எழுதுவதில்லை. ?
மற்ற ராஜாங்க அமைச்சர்கள் எல்லாம் இவர்களுக்கு கீழேதான் வேலை பார்த்தாக வேண்டும். அதில் யார் இருந்தால் என்ன ? மற்றவர்களுக்கு அது போதாதா?
முந்தைய கேபிநெட்டில் கூட இருபத்து நான்கு பேரில் பதினாறு பேர் பார்ப்பனர்கள்.
இன்னும் சொல்லப் போனால் முன்னேறிய முற்போக்கு சமுதாய மக்களுக்குத்தான் மோடி அரசில் அதிக பொறுப்புகள் கொடுக்கப் படுகின்றன.
கார்போரட்டுகளுக்கான ஆட்சி என்று பேர் வாங்கிய மோடி அரசு மேல்தட்டு மக்களுக்கான அரசாகவும் பேர் வாங்கி இருக்கிறது .
அதிகாரிகளின் ஆட்சி எப்போது பொது மக்களுக்கான ஆட்சியாக மாறும் ?