இந்தியாவுக்கு ‘ஆதார் ‘ அட்டை போல தமிழகத்துக்கு ‘குடியாவணம்’ அட்டை ஏன் கூடாது?

india aadhar card

மத்திய அரசின் பல திட்டங்களுக்கு பயன் படும் ஆவணமாக ஆதார் அட்டை பயன்பட்டு வருகிறது.

தவறில்லை.

இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை கேட்க கூடாது என்று சொல்லியும் மத்திய அரசு பிடிவாதமாக பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.

அதேபோல் ஏன்   தமிழக அரசின் திட்டங்கள்  முறையாக அமுல் படுத்தப் பட தமிழகத்தில் வாழும் இந்தியக் குடிமகன் களுக்கு என தனியாக ஒரு ‘ குடியாவண ‘ அட்டை  திட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தக் கூடாது என்ற கேள்வி வலுப் பெற்று வருகிறது.

தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா , ஆந்திரா அரசுகள்  டிஜி லாக்கர்    ( DigiLocker ) என்ற  செய்முறை மூலம் ஒரு மென்பொருள் தயாரித்து அதை பல பெரிய திட்டங்களுக்கு செல்லுபடியாக்கும் வகையில் திட்டமிட்டு அதற்குள் கல்வி சான்றிதழ்கள் , நில உடமை ஆவணங்கள் , சமையல்  எரிவாயு உதவி துகை ,  வாகன ஓட்டும் உரிமை ஆவணம்  போன்ற பல வற்றையும் அமுல் படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு என தனியாக மாநில குடியாவணம் ஒன்றை உருவாக்குவதில் பல நன்மைகள் உண்டு.

ஆள்வோர் இதை விரிவாக  பரிசீலித்து

தமிழ் நாட்டில் வாழ்வோர்

அரசு நல திட்டங்களை பெற வசதியாகவும்

மாநிலத்தில் குடியிருப்போர் பட்டியலை

தயார் நிலையில்  பராமரித்து  அதை

பல் நோக்கு திட்டங்களுக்கு பயன் படும் வகையிலும்

மத்திய அரசுக்கு ஆதார்

தமிழ் நாட்டுக்கு குடியாவணம்

கொண்டு வருவது உடனடி தேவை .