உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்கவும் குடியிருப்பு பகுதிகளில் விளமரம் செய்து அழகை சீர் குலைக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதிகம் பாதிக்கப் படுவது திருமாவளவன் ஆகத்தான் இருக்க வேண்டும். கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலின் நீண்ட காலமாக சுவர்களில் நிரந்தர இடம் பிடித்திருப்பவர்கள் . , ஓ பி எஸ் இ பி எஸ் தினகரன் போன்ற வர்கள் திடீர்த் தலைவர்கள் இடத்தில் இருக்கிறார்கள். பெரியார், அண்ணா, ஜெயலலிதா தப்பிப்பார்கள்.
Tamilnadu open places ( prevention of disfigurement ) Act 1959 , அதாவது தமிழ்நாடு திறந்த வெளி அழகை சீர்குலைப்பை தடுக்கும் சட்டம் என்று ஒன்று இருப்பது எப்போது நீதிமன்றத்துக்கு நினைவுக்கு வந்தது? வழக்கு வந்தால்தான் பல சட்டங்கள் உயிருக்கு வருகின்றன.
இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூடி பேசி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம்.
பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தேவை என்னவோ அதை செய்ய அரசு முனைப்பை காட்ட வேண்டும். கொடுமை என்னவென்றால் அதிகம் ஆதிக்கம் செய்து பொது மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது ஆளும் கட்சிதான். எனவே நீதி மன்றம் தலையிட்டு தான் ஆக வேண்டும்.
மூலைக்கு மூலை பேனர்களும் பதாகை களும் சுவரொட்டிகளும் கொடிகளும் கட்டி தங்கள் தங்கள் தலைவர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை இனி எப்படி காண்பிப்பது?
இந்த அமைச்சரிடம் இந்த வேலை ஆக வேண்டும் என்றால் இவரை பார்த்தால் போதும் என்று இனி எப்படி பொதுமக்களுக்கு புரிய வைப்பது?
இதை எப்படி காவல் துறை அமுல் படுத்தும்?
ஆளும் கட்சியின் பேனரை அப்புறப் படுத்தும் தைரியம் வருமா? ஆளும் கட்சியை அனுமதித்து விட்டு எதிர்க்கட்சியை மட்டும் தடுக்க முடியுமா?
டிராபிக் ராமசாமி போராடி போராடி அகற்றப் படும் பேனர்கள் மீண்டும் மீண்டும் முளைக்கிறதே தடுக்க முடிகிறதா?
உயிருடன் இருப்பவர்களின் படம் போட்டால் மட்டும்தான் அழகு சீர் குலையுமா?
மறைந்த தலைவர்களின் படங்களை போட்டால் சீர் குலையாதா?
பலரது பிழைப்பு பறி போய் விட்டது மட்டும் உண்மை.
அமுல் படுத்தப் படுகிறதா என்பதை பார்ப்போம்! பிறகு பார்க்கலாம்!!