பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்திய வருமான துறை 170 கொடி பணமும் 178 கிலோ தங்கமும் கைப்பற்றியதாக தகவல்கள் வந்தன.
அது தொடர்பான விசாரணையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய 33.6 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து அவருக்கு தரப்பட்டது என்ற தகவல் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி சி பி ஐ க்கு தெரிவித்திருப்பது ஒட்டு மொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது.
இந்த அதிசயம் எங்காவது உண்டா? ஓ பி எஸ் சும் எடப்பாடியும் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தனர் என்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை தவிர்க்க முடியாது என்பதால்ரிசர்வ் வங்கி இந்த தகவலை சி பி ஐ இடம் இருந்து மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது.
பா ஜ க அரசு இந்த இவர்களையும் காப்பாற்ற ரிசர்வ் வங்கியை பயன் படுத்துகிறது அல்லது இவர்கள் ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மையாகிறது.
நம்பிக்கைக்குரிய ரிசர்வ் வங்கி தனது நம்பகத் தன்மையை நிலை நாட்டியாக வேண்டும்.
இதை ஏன் உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஆட்படுத்தக் கூடாது?