திருவண்ணாமலை விவசாயி ஞானசேகரன். டிராக்டர் வாங்க ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்று அதில் ஒன்றரை லட்சம் திருப்பி கட்டிவிட்டு பாக்கி வைத்திருக்கிறார்.
அதை வசூலிக்க வங்கி மேலாளர் தனியார் ஏஜென்சியை நியமித்து ஆட்களை அனுப்பி உள்ளார்.
இரண்டு மாதங்களில் அறுவடை முடிந்ததும் செலுத்துவதாக கூறிய விவசாயியின் உறுதி மொழியை ஏற்காமல் ஜப்தி செய்ய முயன்றதால் அதை ஞானசேகரன் தடுத்திருக்கிறார். அவரை ஏஜெண்டுகள் தாக்கியதால் மயக்க மடைந்த ஞானசேகரனை மருத்துவ மனையில் சேர்த்தும் பயனில்லாமல் மரணித்திருக்கிறார் அவர்.
கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டிய சம்பவம் இது.
எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .
எவ்வளவு இழப்பீடு தந்தாலும் அந்த குடும்பத்தின் சோகத்தை ஈடு செய்ய முடியுமா?
அத்து மீறிய ஏஜெண்டுகளுக்கும் அவர்களை ஏவிய மேலாளருக்கும் என்ன தண்டணை?
பினாமி அரசு என்ன செய்ய போகிறது?