கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் நாலுமாவடி ஜெபக்கூட்டத்தில் பேசியதாக ஒரு விடியோ உலவுகிறது.
அதில் அவர் ‘ வைகோ மனைவி பிள்ளைங்க எல்லாம் ரட்சிக்கப்பட்டு அசெம்பிளி ஆப் சர்ச்சில் சேர்ந்து ஞானஸ்நானம் எடுத்துக்கிட்டாங்க. சர்ச்சுக்கு ஒழுங்கா போறாங்க. வைகோ அரசியலில் இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் அவர் என்னிடம் பிரதர் நான் காலையிலும் இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்றார் ‘ என்று பேசியிருப்பதாக தெரிகிறது. .
இரண்டு நாள் கழித்து வைகோ ‘ நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை. இந்து மதத்திலேயே இருக்கிறேன்.” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். ‘ தன் மகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தது உண்மைதான். ஆனால் என் குடும்பத்தவர் பற்றி லாசரஸ் கூறியுள்ளது உண்மைக்கு மாறானது” அன்று மறுத்துள்ளார்.
சமீப காலமாக வைகோ மனைவி நெற்றியில் பொட்டு இல்லை என்பதை வைத்து அவர் கட்சிக்காரர்களே அது தெரிந்த விஷயம்தானே என்று சொல்வதாக ரிப்போர்டர் பத்திரிகை சொல்கிறது.
லாசரஸ் தனிப்பட்ட கூட்டத்தில் பேசவில்லை. மக்கள் கூடி இருக்கும் ஜெபக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.. அவர் அப்படி பொய் பேச அவசியம் என்ன?
மறுத்த வைகோ தான் நாத்திகன் என்று சொல்லி இருக்கலாம். இந்து மதத்தில் நீடிக்கிறேன் என்கிறார். அதாவது பார்ப்பன மதத்தில் நீடிக்கிறேன் என்பது பெரியார் கொள்கையை ஏற்றவர் பேசும் பேச்சா?
மதம் ஒருவரது தனிப்பட்ட உரிமை. வைகோவுக்கும் தாராளமாக அந்த உரிமை உண்டு. ஆனால் மக்களுக்கு அரசியலில் இருக்கும் ஒருவர் உண்மையை சொல்ல வேண்டும்.
நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று பா ஜ கவின் எச் ராஜா குறிப்பிட்டபோது தன் லெட்டர் பேடிலேயே ஜோசப் விஜய் என்று விஜய் விளக்க அறிக்கை விடவில்லையா?
எல்லா மதங்களிலும் சொல்லப் படும் அறிவுரைகளை மதிப்பது என்பது வேறு. தான் அந்த மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பது வேறு. இந்த வேறுபாடு வைகோவுக்கு தெரியாதா?
கிறிஸ்தவ சர்ச்சை வைகோவுக்கு நல்ல பெயரைத் தரவில்லை.