பா ஜ க வுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 8000 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்திருப்பதாக போபர்ஸ் பத்திரிகை ஆய்வு செய்து தகவல் வெளியிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஊழலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. மோடி அரசில் லஞ்சம் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
லஞ்ச ஊழல் அற்ற அரசை நடத்திக் கொண்டு இருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை பொறுப்பான தலைவர் ஒருவர் கூறுகிறார்.
ஒன்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது உண்மையை விளக்க வேண்டும்.
கார்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே மோடி அரசு செயல் படுகிறது என்பதுதான் எல்லாருடைய குற்றச்சாட்டும்.
இந்த நிலையில் அவர்களிடம் நன்கொடை வாங்கி தேர்தல் செலவு செய்து வெற்றி பெறுவதற்கு திறமை தேவையில்லை.
விளக்கம் தர வேண்டும் பா ஜ க .