மழை நீரை சேமித்தால் தண்ணீர் சண்டை வராது??!! ஆய்வு சொல்வது உண்மையா?

saraswati-river

ஆண்டுக்கு சராசரியாக நம் நாட்டில் 1,41,258   டிஎம்சி மழை பொழிவதாவும் அதில் நாம் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவு   7062 டிஎம்சி தான் என்றும் ஒரு செய்தி சொல்கிறது.

பிராந்திய ரீதியில் முதலில் நதிகளை இணைப்பது பின்னர் அனைத்திந்திய ரீதியில் இணைப்பது என்பது நீண்ட கால திட்டம்.    ஏனெனில் அதற்கு பல லட்சம் கோடிகள் செலவாகும்.

ஆக,  வாய்ப்புள்ள பகுதிகளில் எல்லாம் நதிகள் இணைப்பு , அதிகபட்ச மழைநீர் சேமிப்பு என்ற இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றினாலே நாட்டில் தண்ணீர் பஞ்சம்  இருக்காது  என்பது தெரிகிறது.

ஆனால், மத்திய மாநில அரசுகள் இதில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றன  முன்னுரிமை தருகின்றன மக்களுக்கு எவ்விதம் எல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதை கணக்கிட்டால் அவர்களின்  ஆளும் திறமை கேள்விக்குரியதாகவே  இருக்கிறது.

தகுதில்லாதவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.    அவர்கள் ஊழல் செய்கிறார்கள்.  அவர்கள் தரும் பணத்தை மக்கள் வாங்கி வாக்குப் போடுகிறார்கள்.    இந்த சுழற்சி எப்போது மாறும்?

அகில இந்தியாவில் மோடி திட்டமிட்டிருக்கும்  60 நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஐந்தரை லட்சம் கோடிகள் செலவாகும் என்பதால் இப்போதைக்கு அது அமுலுக்கு வரும் சாத்தியமே இல்லை.

தமிழகத்தை பொறுத்த வரையில் மட்டுமாவது நாம் மழை நீர் சேமிப்பில் அதிக கவனம்  செலுத்தினால் காவிரி நீரை பதினைந்து டிஎம்சி நீரை குறைத்து கொடுத்ததை பற்றி  கவலை படாமல் விவசாயிகள் தங்கள் பிழைப்பை தொடர்வார்கள்.

எனவே நமக்கு தேவை திட்டமிட்டு ஆளும் ஒரு அரசு.    ஊழலில் திளைக்காத அரசு.

நான் மட்டுமே நல்லவன் என்று யார் வந்தாலும் எதையுமே ஆராயாமல் முடி சூட்டி விட்டு பின்னால் ஏமாறாது இருக்க தமிழ் சமூகம் உறுதி எடுக்க வேண்டும்.

ஆள்பவர் தமிழராகவும் இருக்க வேண்டும்.   அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.  அவர் தனி மனிதராகவும் இருக்க கூடாது.    அவருடன் இணைத்து பணி செய்ய அதிகாரம் படைத்த கூட்டு தலைமை இருக்க வேண்டும்.

எனவே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு மழை நீர் செமிப்பும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகளின் இணைப்பும்தான் என்பதை உணர்ந்து செயல் படுத்தும் அரசை அமைக்க உறுதி பூணுவோம்.