ஓ என் ஜி சி கிணறுகள் அனுமதி பெறாதவை; அதிர்ச்சி தகவல்

தமிழகம் முழுதும் இயங்கி வரும் ஒ என் ஜி சி எண்ணெய் கிணறுகள் அனைத்தும் மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாதவை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற செய்தியை பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டார்.     ஓய்வு பெற்ற நீதியரசர் அரி பரந்தாமனும் இதை பகிர்ந்து கொண்டார்.

சட்ட விரோதமாக இயங்கும் இவை அனைத்தையும் உடனே மூட வேண்டும்.

இப்போது என்ன செய்ய போகிறார்கள்?

அனுமதியை முன் தேதியிட்டு வழங்கி  மேலும் மேலும் கிணறுகள் தோண்டுவதை ஊக்குவிக்கப் போகிறார்களா?

குறிப்பாக டெல்டா பகுதிகளில் பெருகி வரும்  எண்ணெய் கிணறுகள் எதிர்காலத்தில் இந்த பகுதிகளில் விவசாயத்தை அழித்து விடும் என்பது தெரிந்தும் கவலைப் படாமல் தொடர்கிறார்களே அவர்களது நோக்கம் என்ன?

விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி நிலங்களை பிடுங்கி இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது.

ஆனால் தமிழகத்தை ஆள்பவர்கள் எந்த  கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை பாழாக்கி எடுக்கப் படும் எண்ணையால் இங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை?

உலகத்திலேயே விவசாயம் செய்யப் படும் பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதில்லை என்கிறார்களே இங்கு மட்டும் ஏன்?

மக்கள் விழிப்புணர்வு மட்டுமே இவர்களை தடுக்க முடியும்.