சாமியார் ஆசாராம் சாகும் வரை சிறையில்; சிறுமியை கற்பழித்த வழக்கில்??!!

கடவுள் பேரைச்  சொல்லி காமக் களியாட்டம் ஆடிய      சாமியார்கள் பட்டியலில் ஆசாராமும்  சேர்ந்து கொண்டார்.

சிந்தி வகுப்பு;  பாகிஸ்தானில் இருந்து ஓடி வந்த குடும்பம்.

சிறு வயதிலேயே ஒரு குருவின் பார்வையில் பட்டு சாமியார் ஆகிறார் .

பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் எப்படி மக்களை மயக்கலாம் என்பதற்கு ஆசாராம் ஒரு சிறந்த அடையாளம்.

கடந்த நாற்பதாண்டுகளில் நான்கைந்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும்  நானூறுக்கும் மேற்பட்ட ஆசிரமங்கள்- பத்தாயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் – எல்லாம் அரசியல் கட்சிகளின் ஆதரவோடுதான்.

பாஜக வும் காங்கிரசும்  போட்டி போட்டுக் கொண்டு அவரை வளர்த்திருக்கின்றன.

கடைசியில் தன்னிடம் சீடராக இருந்த குடும்பத்தை சேர்ந்த  பதினாறு வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் மாட்டிக் கொண்டு ஐந்தாண்டு நடந்த விசாரணைக்குப் பின் சாகும் வரை சிறை தண்டனை பெற்றிருக்கிறார் ஆசாராம்.

மூன்று சாட்சிகளை கொன்று இன்னும் மூன்று  சாட்சிகளை கலைக்க முயன்று தோற்று கடைசியில் நீதி வென்று தண்டனையில் முடிந்திருக்கிறது.

அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேரும் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு கற்பழிப்பு  வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கின்றனவாம்.

கடவுள் நம்பிக்கை, கோவில் இதுவெல்லாம் மக்களை மயக்கும் சாதனங்கள்  மட்டுமே என்பது பலகால குற்றச்சாட்டு.   மக்களை நன்னெறிக்கு வழி காட்டுவதற்கு பதிலாக தங்களது ஆடம்பர வாழ்வுக்கு சாதனமாக இவைகளை சுயநலமிகள் பயன் படுத்தி வருகிறார்கள்.

விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தில் இது சாத்தியமா?

அதிலும் குறிப்பாக பார்ப்பனர்கள் அல்லாத சாமியார்கள் விரைவில் மாட்டிக் கொள்கிறார்கள்.

ராம்பால்- கபீர் வழியில்  சத்லோக் ஆசிரமம் நடத்தும் இவர் ஹரியானாவில் பிரபலம் .  ஐந்து பெண்களின் உடல்கள் இவர் ஆசிரமத்தில் கண்டு எடுக்கப்  பட்டனவாம். கொலைக்குற்றத்தின் கீழ் சிறையில்  இருக்கிறார்.   இன்னும் ஆறு வழக்குகள் நிலுவையில் .

குர்மீத் ராம் ரஹீம சிங் – இரண்டு சீடர்களை கற்பழித்த வழக்கில் சிறையில் இருக்கிறார்.  இவரை கைது செய்ய முயன்ற போது கலவரத்தில் முப்பது பேர் இறந்தார்கள்.

நித்யானந்தா-  கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு மாறான செக்ஸ் புகாரின்  52  நாட்கள் சிறையில் இருந்தார். இப்போது  பிணையில்.

இச்சாதாரி பீமானந்த் –  இயற்பெயர் ஸ்ரீமுராத் திவிவேதி . மிக நவீன முறையில் செக்ஸ் வியாபாரம் நடத்திய குற்றச்சாட்டில் சிறையில்

சுவாமி விகாசானந்த் – இயற்பெயர் விகாஷ் ஜோஷி- ;   ஜபல்பூர் பகுதியில்  பெண்களை தவறான செக்ஸ் பயன்பாட்டுக்கு ஆட்படுத்தி ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் சிறையில்  இருக்கிறார்.

வீரேந்திர தேவ் தீட்சித்- அத்யாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற பெயரில்   விஜய் விஹார்  ரோகினி பகுதிகளில்  ஆசிரமம் நடத்திக்கொண்டு இருந்தவர் மீது கற்பழிப்பு வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிற நிலையில் தற்போது இருப்பது  தலைமறைவாக.

தமிழ்நாட்டில் பிரேமானந்தா  என்ற சாமியார் சிறு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சியில் சிறையிலேயே காலமானார்.

சாமியார்கள் வணங்கத் தக்கவர் களாக இருந்த காலம் ஒன்று  உண்டு

இன்று

சாமியார் என்றாலே கொஞ்சம் எட்ட நிற்பதே நல்லது.

அதில் என்ன பார்ப்பன சாமியார் பார்ப்பனர் அல்லாத சாமியார் என்கிறீர்களா?

பார்ப்பனர்கள் அவ்வளவு எளிதில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.    உங்களை அறியாமலேயே நீங்கள் அவர்களுக்கு அடிமைகள் ஆவீர்கள்.      சூட்சுமம் அறிந்த கைகாரர்கள்.  பார்ப்பனர்கள் நடத்தும் ஆன்மிக வியாபார தலங்கள்  பற்றி அடுத்து ஆராய்வோம்.