ஒருவழியாக இம்மாதத்தில் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வந்து விடும் .
18 எம் எல் ஏக்களின் பதவி தப்புமா என்பதை விட இந்த அரசின் பதவிக்காலம் தப்புமா என்பதே எதிர்பார்ப்பு.
நீதிபதி சத்யநாராயணா ஜூலை 23 முதல் 27 வரை தினந்தோறும் இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து விசாரிப்பதாக சொல்லி இருந்தாலும் அதற்கு முன்பே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒதுக்கப் படும் வாய்ப்பு அதிகம்.
தகுதியிழப்பு செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பே இங்கு இறுதியானது.
பாதிக்கப் படும் தரப்பு உடனடியாக உச்சநீதி மன்றம் சென்றாலும் அங்கு இங்கு போல் பல மாதங்கள் இல்லாமல் சில மாதங்களில் தீர்ப்பு வந்து விடும். எனவே இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி அரசுக்கு ஆயுள் உண்டு.
அதற்குள் வேறு பிரச்னைகள் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.
முதல் பெஞ்சில் வழக்கு விசாரணையில் வாதப் பிரதி வாதங்கள் சுமார் நான்கு மாதங்கள் நீடித்தது அநியாயம். இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
இந்த வழக்கில் மட்டுமல்ல. பல அரசியல் வழக்குகளில் தாமதங்கள் வழக்கறிஞர்கள் வாதங்கள் வைப்பதில் ஏற்படுகிறது. இதை அவர்களில் சங்கம்தான் பரிசீலிக்க வேண்டும்.
நீதி தேவதை கால தாமதத்தை கண் கொண்டு பார்க்க மாட்டேன் என்றா சொல்லுவாள்?