பத்து நாளில் ஏழு பேர் மரணம்- மூன்று சம்பவங்களில்??!!
சென்னை மின்சார ரயிலில் நடந்த இறப்புகள்
வெறும் விபத்துக்கள் தானா அதற்கும் மேலா?
ரயிலுக்கும் கட்டுமானத் திற்கும் ஏழடி இடைவெளி இருந்தால் போதும்
என்றாலும் முதல் சம்பவத்தில் ஒருவர் இறந்தவுடன்
கண்டிப்பு காட்டியிருக்க வேண்டாமா ரயில் நிர்வாகம்?
தொத்திக்கொண்டு செல்வது தடை செய்யப் பட்டதாயிருந்தலும்
ஏன் கதவுகள் அமைக்க வில்லை என்ற கேள்விக்கு என்ன விடை?
வேறு வழியில்லாமல் தானே ரயிலில் செல்கிறார்கள்
அதற்காக நீங்கள் விதி மீறினால் நாங்கள் பொறுப்பல்ல என்பீர்களா?
மனசாட்சியே இல்லாதவர்கள் நிர்வாகிகளா?
முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் யாருக்கு என்ன நிவாரணம் தரும்?
உயிரைப் பறித்த கட்டுமானம் ஏன் இன்னும் அகற்றப் படவில்லை?
விபத்துகளை தடுக்கத் தவறியவர்கள் தண்டிக்கப் பட்டால் தான்
விபத்துகள் குறையும்.