தெலுகு நடிகை ஸ்ரீ ரெட்டி சிலகாலமாக தெலுகு தமிழ் நடிகர் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார்.
தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றிய நடிகர்கள் இயக்குனர்கள் பட்டியலையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இவர் மீது செக்ஸ் புகார் கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக நடிகர் இயக்குனர் வாராகி புகார் கொடுக்க அவர் மீது இவர் என்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருக்கிறார்.
அறைக்குள் நடப்பதை அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்று வேண்டுமானால் ஸ்ரீ ரெட்டி மீது பாராட்டு தெரிவிக்கலாமே தவிர அவரது குற்றச்சாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதுதானா ?
தன்னை கற்பழித்தார்கள் என்று அவர் புகார் கொடுக்க வில்லை. ஏனென்றால் அது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 ல் சொல்லப்பட்ட விளக்கங்களுக்குள் இவர் குறிப்பிடும் சம்பவங்கள் வராது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.
விருப்பத்துக்கு மாறாக , சம்மதம் இல்லாமல், அச்சத்தில் ஆழ்த்தி சம்மதம் பெறல், கணவன் இல்லையென்று தெரிந்தே ஆனால் தான்தான் கணவன் என்று நம்பசெய்து பெற்ற சம்மதம் மனநிலை சரியில்லாதபோதோ மயக்க மருந்துகள் செலுத்தியோ பெற்ற சம்மதம், பதினாறு வயதுக்குள் இருக்கும்போது பெற்ற சம்மதம் ஆகிய விதி விலக்குகள் சம்பவத்தை குற்றம் என வரையறைப் படுத்தாது.
பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள் என்றால் ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்க வில்லை. ?
எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் இவர் ஏமாறுவார் சட்டம் தானாக வந்து காப்பாற்றுமா?
ஒன்று தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோர வேண்டும். அதாவது பட வாய்ப்பு வேண்டாம் தண்டனை பெற்று தருவேன் என்று நடவடிக்கை கோரவேண்டும். இதுவரை அவர் எவர் மீது தண்டனை கோரி புகார் கொடுத்திருக்கிறார் ?
இல்லையென்றால் இனிமேல் ஆவது எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்.
பாரதிராஜா சொல்வதுபோல் ஊசி இடங்கொடாமல் நூல் நுழைய முடியாது அல்லவா?
பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஸ்ரீ ரெட்டி கையில்தான் இருக்கிறது.