மேல்சாதிக்காரன் அடங்கவே மாட்டான்.
ஒவ்வொரு ஆண்டும் காந்திஜி பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க பல வழிகளிலும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள் .
ராஷ்ட்ரீய சனாதன் தள் – உ பி யின் சித்திரகூட் மாவட்டத்தில் சக்வாரா கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க நால்வர் முயற்சி செய்திருக்கிறார்கள். தகவல் தெரிந்து காவல் துறை அதன் மண்டல தலைவர் பிரிஜேஷ் பாண்டே மற்றும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கிறார்கள்.
ராமேந்திரா என்பவரின் தனி இடத்தில் அந்த சிலையை வைக்க திட்டம்.
2015 லும் 2017 லும் இது போன்ற முயற்சி நடந்த பொது நாம் இது பற்றி எழுதியிருக்கிறோம் .
இந்து ராஷ்டிரம் அமைக்கும் முயற்சியை அவர்கள் கைவிடுவதாக தெரியவில்லை.
காந்திஜியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப் பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்செவை 14 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுதலை செய்தால் அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.
தேசிய கட்சிகள் தங்களுக் கென்று தனி விதிகள் வைத்திருக்கின்றன. அதனால்தான் மக்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள்.
பா ஜ க தனக்கு இதில்தொடர்பில்லை என்பது போல்தான் பேசி வருகிறார்கள்.
உண்மையானால் அந்த மாபாதகர்கள் மேல் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்து தேச துரோக வழக்கு பதிய வேண்டும். இனி இது போன்ற சிந்தனை யாருக்கும் வரவே கூடாது என்பதான நடவடிக்கையாக இது இருக்க வேண்டும்.
மாறாக விசாரித்து விட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் அந்த முயற்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதே பா ஜ க வின் விருப்பமாகவும் இருந்தால்தான் அவர்கள் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.