எல்லாரையும் கேட்ட வார்த்தைகளில் பேசி பழக்கப் பட்ட எச் ராஜா தனக்கு இதனால் மரியாதை கிடைக்கும் என்று திட்டமிட்டு பேசிவருகிறார்.
இம்மாதிரி கேட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் யாரும் எந்த கட்சியிலும் அகில இந்திய அளவில் பொறுப்புகளை பெற முடியாது. பா ஜ க அவர்கள் கட்சி. அவர்கள் யாரையும் திட்டுவார்கள். எனவே திட்டுபவர்களுக்கு மரியாதை அங்கே உண்டு.
அதனால்தான் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் வார்த்தைகளால் அர்ச்சித்து எச் ராஜா அவமரியாதை செய்தார்.
சி டி செல்வம் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நீதி மன்ற அவமதிப்பு வழக்குபதிவு செய்து நோட்டிஸ் அனுப்பியது.
சி டி செல்வம் தலைமையில் ஆன அமர்வுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கட்சி சொன்ன ராஜா அதற்கு என ஒரு மனுவைப் போட தலைமை நீதிபதி அதையும் சி டி செல்வம் அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட வேறு வழி இல்லாமல் இன்று அதே அமர்வின் முன்பு ஆஜரான எச் ராஜா தனது செயல்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
உயர் நீதிமன்றமும் நீதிமன்றத்தின் மாண்பு அதன் பெருந்தன்மையில் இருக்கிறது என்று பதிவு செய்து நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டதால் நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தது.
உணர்ச்சிப் வசப்பட்டு பேசிவிட்டாராம். விடியோவை பார்த்த பின் தான் தான் செய்தது தவறு என்று தெரிந்ததாம். தான் மிகவும் மனநிலை பாதிக்கப் பட்ட நிலையிலிருந்ததாக (agitated state of mind) வும் கூறினார். அதைத்தானே எல்லா கட்சிகளும் சுட்டிக் காட்டி வந்தன. ஒருநல்ல மனநல மருத்துவரை பார்த்திருக்கலாம் .
ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 153 188 294 (b) 353, 505 (1)(b)(c), 506 (1) மீது வழக்குகள் பதியப் பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
அதில் நடவடிக்கை எடுக்க ஏன் காவல் துறை தாமதிக்க வேண்டும்?
ஆடின காலும் பேசிய வாயும் நிற்கவே நிற்காது. எச் ராஜா திட்டாமல் பேசினால் அவர் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள். இது அவருக்கு தெரியும். எனவே மீண்டும் அவர் திட்டுவதை கேட்க தமிழகம் தயாராக இருக்கட்டும்.
எப்போதும் பேசுவாரா ? மாட்டவே மாட்டார். அதிகாரத்தில் இருக்கும் போது மட்டும் இப்படித்தான் பேசுவார்.
அதுவும் மாநிலத்தில் இருப்பது அடிமைகளின் ஆட்சி. தைரியம் இருக்குமா மத்திய ஆட்சியின் கட்சி தேசிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க?
சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள் .