ரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா ஏமாறிக் கொண்டிருக்கிறா?
மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. 23ஆம் தேதி ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை அவரது ரசிகர்களை பெருமளவு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்து உள்ளது என்று அர்த்தம் என்று இப்போது சொல்லும் ரஜினிகாந்த் ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றுவதாக அறிவித்தது ஏன்?
அப்போதே மக்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு இவர் முன்வந்திருக்க வேண்டும் . அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி, 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன என்றெல்லாம் சொல்லும் ரஜினிகாந்த் 30, 40 ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில் ஈடுபடுவோ தகுதி ஆகிவிடாது என்பவர் உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வார்?
ரஜினிகாந்த் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டது உண்மைதான். ரசிகர்களை விசேஷ காட்சிகளுக்கு அதிக விலை கொடுத்து விற்கக்கூடாது என்று எப்போதாவது கட்டுப்பாடு விதித்து இருக்கிறாரா? கட்டவுட்களுக்கு அபிஷேகங்கள் கூடாது என்று எப்போதாவது சொல்லி இருக்கிறாரா? இவை எல்லாம் கை செலவு செய்யாமல் எந்த ரசிகன் வசூல் செய்து செய்திருக்க முடியும்?
யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை என்கிறாரே அரசியலுக்கு வருபவர்கள் செலவு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் என்று சொல்வாரா? அரசியலுக்கு என்று பல எழுதப்படாத விதிகள் இருக்கின்றன.
கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும் என்ற அடிப்படை தேவைகள் அரசியலில் இல்லை என்பதுதான் ரஜினிகாந்தின் நம்பிக்கையா? ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்ற உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் என்ன மாற்றத்தை இவர் கொண்டு வர மீண்டும் அரசியலில் செலவு செய்பவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் கொடுத்தால் அவர்கள் செய்த செலவுகளை திருப்பி எடுக்கத்தான் முயற்சிப்பார்கள். இதற்கு என்ன விடை வைத்து இருக்கிறார் ரஜினி?
இவர் சங்கப் பரிவாரங்களின் பிரதிநிதி என்பது இதுவரை இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் முத்திரை. அதை உடைப்பதற்கு என்ன செய்து இருக்கிறார் ரஜினி? ஆம் அப்படித்தான் என்கிறாரா ?
இவர் நினைத்தபோது பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்வார். அதுவரை பிரச்சனைகள் காத்திருக்க வேண்டுமா? இது என்ன நியாயம் ரஜினிகாந்த் ? என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே வைத்து அரசியல் செய்ய போவதில்லை என்று அறிவித்த பின் அரசியலுக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார் ரஜினி?
ரசிகர்களை ஏமாற்றி பொது மக்களையும் ஏமாற்றி தானும் ஏமாறாமல் இருப்பதற்கு ரஜினிகாந்த் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் நின்று வென்றாலும் அரசு பொறுப்பிற்கு வரமாட்டேன் என்பதுதான் அது. பொறுப்புக்கு வராமல் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நாட்டுக்கு நன்மை செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இருந்து பணி செய்ய முடியாதா? அரசு பொறுப்பிற்கு வந்து தான் செய்ய வேண்டுமா?
மக்கள் மனதறிந்து ரஜினி பேசட்டும்.