1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரத்தில் 1984 ல் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்துக்குக் குறையாது.
இதைப்பற்றி கேட்டவுடன்தான் காலஞ்சென்ற ராஜீவ் காந்தி ஒரு யானை நடந்தால் எறும்புகள் சாவது இயற்கைதானே என்றார். அப்படித்தான் காங்கிரஸ்காரர்கள் மனநிலை இருந்தது.
அப்போது மகிபால்பூர் என்ற இடத்தில் அவதார் சிங் ஹர்தேவ் சிங் என்று இருவர் வீட்டில் இருந்து இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.
அவர்களை கொன்றதாக யாஷ்பால்சிங் நரேஷ் செஹ்ராவாத் என்று இரண்டு பேர் மீது வழக்கு.
அவர்களின் மீதான வழக்கை காவல்துறை சென்ற 1996 லேயே மூடிவிட்டது. அதற்குப் பின்னால் உச்சநீதிமன்றம் 2015-ல் அமைத்த சிறப்பு விசாரணை குழு இந்த வழக்குகளை எல்லாம் மீண்டும் கோப்பில் எடுத்து மறு விசாரணை செய்து குற்றபத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்தது.
அதில்தான் யாச்பால்சிங் மரண தண்டனை யும் நரேஷ் ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளனர்.
அவர்கள் நிச்சயம் மேன்முறையீடு செல்வார்கள். இதற்கே இத்தனை ஆண்டுகள் என்றால் மேன்முறையீடு முடிந்து நீதி நிலைநாட்டப் பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
இப்போதாவது நீதி கிடைத்ததே என்று பாராட்டுவதா இதற்கே இத்தனை ஆண்டுகளா என்று நிந்திப்பதா?
இது தாமதிக்கப்பட்ட நீதி என்பதில் சந்தேகம் இல்லை.