மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு கொல்லப்பட்ட அக்லக்;’ துப்பட்டாவை நழுவ விட்ட 4 வயது மகளை அடித்துக் கொன்ற முஸ்லிம் அப்பா; ; கிணற்றில் விழுந்த பசுவை காக்க க்ரேனுடன் கிணற்றில் குதித்த முகமது சகி ; மூன்றும் நடந்தது உ.பி.யில்;- விநோதமா? விபரீதமா?


        உ.பி.யின் பிசொதா கிராமத்தில் வசிக்கும்  6000   இந்துக்களுடன்  50 முஸ்லிம் குடும்பங்கள் சுமுகமாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 
             ஒருநாள் கோவிலில் அக்லக் வீட்டில் மாட்டுக்கறி சமைத்து வைத்து இருப்பதாக தகவல் சொல்லப் படுகிறது. ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டு அக் லக்கை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.   அவரது மகனும் காட்டுத்தனமாக தாக்கப் பட்டிருக்கிறார்.   இறக்கும் முன் தன் இந்து நண்பருக்கு போன் செய்து போலீஸ் உதவி கோரியிருக்கிறார்.   
             போஜ்புரா தாலுகா வை சேர்ந்த சந்த் பாபு ,  வீட்டில் சாப்பிடும்போது  4  வயது மகள் தனது துப்பட்டாவை நழுவ விட்டதில்  இஸ்லாத்துக்கு விரோதமாக ஷரியத் துக்கு எதிராக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி மகளின் தலையை தரையில் பலமுறை மோதியதில் மகள் இறந்தார்.   மகள் நாகரிக  மோகத்தில் சம்பிரதாயத்தை கடைப் பிடிப்பதில்லை என்று வேறு சொல்லி இருக்கிறார்.
       

       

               பாலிகேடா பகுதியில் மசூதியில் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது சகி , கிணற்றில் தவறி விழுந்த பசுவைக் காப்பாற்ற கிரேன்  இறக்கப்பட்டபோது அதனுடன்  தானும் இறங்கி பசுவைக் காப்பாற்ற உதவியிருக்கிறார்.   
                மூன்று சம்பவங்களும் உ/பி.யில் .    ஆனால் மூன்றும் வெவ்வேறு உண்மைகளை உலகத்துக்கு  வெளிச்சம் போட்டு
 காட்டியிருகிறது. .  
                   மதவெறியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் கூட்டம் திட்டமிட்டு மதக் கலவரத்தை உருவாக்கி வருகிறது. 
                     குழந்தையைக் கொல்லும் அளவு மதம் மனிதனை மிருகமாக்கி விடும்..
                   நேய உணர்வு மதம் சாராதது. 
           சுயமரியாதை இயக்கம் அகில இந்திய அளவில் விரிவடையும் நாளே பொன்னாள்.