அரிசி அட்டை தார்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூபாய் 1000 தர வேண்டும் என்று தடை விதித்த உயர்நீதிமன்றம் தன் உத்தரவு அமுலாகும் முன்பே முக்கால் வாசிப்பேர் வாங்கி விட்டதால் வேறு வழியின்றி சர்க்கரை அட்டை உள்ளவர்களுக்கும் தரலாம் என்று தனது முந்தைய தடையை விலக்கி கொண்டது.
இப்போது எதுவும் வாங்காமல் இருக்கும் அட்டைதார் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு மட்டும் கிடைக்காதா கிடைக்குமா என்பது தெரியவில்லை.
இப்போது இருக்கும் அட்டைகள் எதுவும் வருவாய் சான்று பார்த்து வழங்கப் பட்டதில்லை.
வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவரை அடையாளம் காண எந்த முயற்சியும் எடுக்கப் படவும் இல்லை. எல்லாருக்கும் அரசுப்பணத்தை கொடுத்து அவர்களின் ஆதரவை பெறுவது மட்டுமே நோக்கமாக இருப்பதால் அதில் அவர்கள் அக்கறை காட்ட வில்லை.
இனிமேல் ஆவது குடும்ப அட்டைகளை வருவாய் அடிப்படையில் இனம் பிரிக்க அரசு முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன வழிகளில் அரசின் சுமையை குறைக்கலாம் என்பதை அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் பொதுநலன் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து கொள்கை வகுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
அதில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சிக்க வேண்டும். செய்வார்களா?