இன்னும் பதினைந்து நாளில் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தல் வரப்போகிறது.
இந்த நேரத்தில் வேலூரில் பாராளுமன்ற வேட்பாளராக நிற்கும் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது.
தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர்கள் சொல்லலாம். சோதனை நடத்த தடை ஏதுமில்லைதான்.
ஆனால் எதிர்த்து நிற்கும் ஏ சி சண்முகம் கல்வித்துறையில் துரைமுருகனை விட பல மடங்கு அதிகம் எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்.
நேரம் வரும்போது இதே ஆயுதம் ஏ சி சண்முகம் மீது திருப்பி தாக்காது என்பது என்ன நிச்சயம்?
நேரடியாக அரசியல் ரீதியாக மோத முடியாதவர்கள் இப்படி அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு முதுகில் குத்துகிறார்கள் என்று துரைமுருகன் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இப்படியெல்லாம் செய்து ஒருவரை மிரட்டிவிட முடியுமா?
ஏ சி சண்முகம் பாஜக அரசில் செல்வாக்கு பெற்றவராக இருக்கலாம். அதற்காக இப்படி அதிகார மிரட்டலை செய்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே தவிர ஆதரவு கிடைக்காது.
கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம் என்பது இப்போது நடக்கிறது. வழக்கு நடக்குபோதே இப்படி பெயரை கெடுக்கும் விதமாக செயல் பட்டால் விளைவு எதிர் மாறாகத்தான் போகும்.
பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி எதிரிகளை மிரட்டி வழிக்கு கொண்டு வரும் வேலையை எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக செய்து விட்டது. தமிழ்நாட்டில் அது நடக்காது என்பதை எப்போது அது உணர்ந்து கொள்ளுமோ?