சுப்பிரமணிய சாமிக்கு கீதாஞ்சலி சுவாமி என்றும் சுகாசினி ஹைதர் என்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இதில் சுகாசினி ஹைதர் என்ற முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவர் இந்து பத்திரிகையில் நீண்ட காலமாக பணி புரிந்து வருவது தெரிந்ததே.
சமீபத்தில் சுகாசினி நரேந்திர மோடிக்கு யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மிக உயர்ந்த சிவில் விருதான ‘சயீத்’ என்ற பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது.
அங்கே ஒரு இந்து கோவிலுக்கு அவர் அடிக்கல் நாட்டப்போவதாகவும் தகவல்.
இதற்கிடையே மோடி அப்படி என்ன செய்து விட்டார் என சுகாசினி பதிவு இட்டதாகவும் அதற்கு பதில் அடியாக மற்றொருவர் ‘இந்த மதம் மாறிய பெண்ணுக்கு ஏன் இந்த இந்து விரோதம்?’ என்று பதிவிட்டார்.
அதற்கு பதில் கொடுத்து சுப்பிரமணிய சாமி ‘என் மகள் மதம் மாறவில்லை. ஒன்று உனக்கு புத்தி பேதலித்து இருக்க வேண்டும். அல்லது முட்டாளாக இருக்க வேண்டும் ‘ என்று பதிவிட்டுள்ளார்.
மகள் முஸ்லிமை திருமணம் செய்ததை மறுக்காத சுப்பிரமணிய சாமி மதம் மாற வில்லை என்கிறார். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் தப்பில்லை.