புனிதப் பயண விபத்துகள் சாத்தானின் வேலைகளா? இறைவன் பக்தர்களை சோதிக்கிறானா? அல்லது இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா? மெக்கா விபத்து ஏற்படுத்தும் கேள்விகள்??


       இரண்டு வாரத்தில் மெக்காவில் இரண்டு விபத்துகள்.    முதலில் கிரேன் விழுந்து  107 பேர் இறந்தனர்.  அதுவும் வழிபாட்டு தலத்திலேயே!   இப்போது சாத்தானின் மீது கல் எரியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 220   பேர் இறந்தும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இழப்பு  நேரிட்டிருக்கிறது.    
         மெக்காவில் விபத்து புதிதல்ல.   1999 ல்   –  1426 பேர் பலி ;   1994 ல்  – 270;   1998ல் -118 ‘ 2001ல் -35 ; 2003ல்  – 14    என தொடர்ந்து இழப்புகள்  பலிகள். 
              இறையில்லத்திலேயே  நடக்கும் இத்தகைய இழப்புகள் இஸ்லாத்தில் மட்டுமல்ல.    எல்லா மத சடங்குகளிலும் விபத்துகள் நடக்கின்றன.   
              இந்த ஆண்டிலேயே காட்மண்டுவில் வழிபாடு நடத்திவிட்டு திரும்பிய   குஜராத்  பக்தர்கள் 17  பேர்   விபத்தில்  இறந்தனர்   
 கோதாவரியில்  புனித குளியல் நடத்தி திரும்பிய 18  பேர் தர்மபுரியில் இறந்தனர்.   ஜார்கண்டில்   11  பேர்   அமர்நாத் யாத்திரையில்   16  பேர்  பலி என்று தொடர்கிறது. 
               கிறிஸ்தவ , ஜைன சமண , சீக்கிய  என்று விபத்தில்  பக்தர்கள் பலியாகாத  மத திருவிழாக்கள் இல்லை. 
             இந்த மதங்களின் சுவாமிகள் எல்லாம் தங்கள் பக்தர்களை காக்க தவறுவது ஏன்?   அங்கு அவர்கள் புண்ணியம் செய்து இறந்தார்களா?  அங்குதான் மோட்சம் அளிக்க வேண்டுமா?  அதுதான் விதி என்றால் இறைவன் பேரால் இவை ஏன் நடக்கின்றன?    இவைகளை பற்றி பக்தர்கள் கவலைப் படாத போது மற்றவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்?   
               ஆனாலும் பாமரன் சந்தேகம் கொள்கிறானே?  அவைகளை தீர்க்க அந்தந்த மதங்களின்  குருமார்களுக்கு கடமை இல்லையா?   
விளக்கம் சொல்லுங்கள் அனைத்து  மத  குருமார்களே?