சட்ட மேதை அம்பேத்கரின் பெயரில் சட்ட பல்கலைகழகம் இயங்கி வருகிறது.
ஆனால் இங்கு கடந்த 72 ஆண்டுகளாக ஒரு மலைவாழ் மக்கள் கூட உதவி பேராசிரியர் ஆக நியமிக்கப்பட்டதில்லை என்ற உண்மை சென்னை உயர் நீதிமன்ற வழக்கின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிற்பட்ட, மிக பிற்பட்ட, பட்டியல் வகுப்பு பிரிவினருக்கு இட இதுக்கீடு தந்து 186 உதவி பேராசிரியர் இடங்களுக்கு ஆசிரியர் பயிற்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பை, மலைவாழ் மக்களுக்கு இடம் தராத காரணத்தால், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
எப்படி இந்த முறைகேடு இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளப் பட வில்லை?
இத்தனைக்கும் தேசிய பட்டியல் வகுப்பினர் கமிஷன் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதனை எல்லாம் ஆராய நேரம் இல்லை.
ஆக இதனால் என்ன தெரிகிறது என்றால் எந்த சட்டமும் அதற்கு உருவகம் கொடுக்கப்படவில்லை என்றால் அது இருப்பதில் பயன் இல்லை. வெறும் ஏட்டில் இருந்து என்ன பயன்.?
ஏதோ அப்போதைக்கப்போது நீதி மன்றங்கள் இந்த தவறுகளை சுட்டிக் காட்டுவதால் தவறுகள் நிவர்த்தி செய்யப் படுகின்றன.
இன்னும் பல அநியாயங்கள் நீதிமன்றங்களின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கிடக்கின்றன.