சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து எல்லாருடனுடம் சேர்ந்து வழக்குப் போட்டவர் அன்புமணி ராமதாஸ்.
சென்னை உயர் நீதிமன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதும் உச்ச நீதிமன்றம் சென்று மேன்முறையீடு செய்தால் எனைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் போட்டவர் அன்புமணி.
எங்களால் தான் எட்டு வழி சாலை திட்டம் ரத்தானது என்று விவசாயிகளிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டது பாமக.
ஏன் முதல்வர் பழனிசாமி கூட சாலை வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து ஆனால் உயர்நீதி மன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டால் நாங்கள் நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்போம் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் சேலம் வந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி விவசாயிகளுடன் கலந்து பேசி சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
அப்போது பக்கத்தில் இருந்த மருத்துவர் ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ எந்தவித மறுப்பும் சொல்லவில்லை விளக்கமும் சொல்லவில்லை.
இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பாஜக கூட்டணி என்பது முன்பே தெரியும்தான் என்றாலும் மருத்துவர் ராமதாஸ் காட்டிய மௌனம் அவரது இமேஜை ரொம்பவே டேமேஜ் செய்து விட்டது.