தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற ஒரு மாநில முதல்வரை அவரின் வாகனத்தின் மேலேறி ஒருவர் அறைகிறார் என்றால் அதற்கு பின்புலமாக அதிக சக்தி வாய்ந்தவர் இல்லாமல் அது நடக்குமா?
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அதுதான் நடந்திருக்கிறது.
தன் வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த முதல்வரை பாஜக தூண்டுதலின் பேரில்தான் தாக்கினார் என்று எல்லா தரப்பினரும் கண்டன கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர். சுரேஷ் சௌஹன் என்ற அந்த நபர் பிடித்து உதைக்கப்பட்டு காவல் துறை வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையம் தாண்டி 25 காவலர்கள் சூழ இருக்கும்போது எப்படி இந்த சம்பவம் நடந்தது?
முன்பு ஒருவர் காலில் விழுந்து வணங்குவதுபோல் கேஜ்ரிவால் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது நினைவிருக்கும்.
டெல்லியில் காவல் துறை மத்திய அரசின் கையில் உள்ளது கவனிக்கத் தக்கது.
பாஜகவின் மற்றொரு கோர முகத்தை இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தான் 9 முறை தாக்கப்பட்டிருப்பதாகவும் இவ்விதம் நாட்டின் எந்த முதல் அமைச்சரும் நடத்தப்பட்டதில்லை என்றும் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது வெட்கப்படத்தக்கது.
தங்களுக்கு தொடர்பில்லை என்று பாஜக மறுக்கலாம்.
ஆனால் காவல்துறையை கையில் வைத்திருப்பவர்கள் நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்ல முடியாது அல்லவா?