மக்கள் நல கூட்டியக்கம் என்று வலது இடது கம்யுனிச்டுகளும் மனித நேய மக்கள் கட்சியும் திருமாவளவனும் வைகோவும் கை
கோர்த்திருக்கிறார்கள். .
தி மு க- அ தி மு க விற்கு மாற்றாக மூன்றாம் சக்தியை கொண்டு வர வேண்டும் என்ற கூச்சலில் தே மு தி கவும் சேர்ந்து கொண்டது. அதில் ஜி கே வாசனும் சேர்ந்து கொண்டால் வலுவான கூட்டணியாக உரு மாறுமா?
இந்த சூழலில் பிருந்தா தி மு க – அ தி மு க ஆகிய இரண்டு கட்சிகளையும் கட்சி கொள்கைகளை வாக்கு வங்கிக்காக புதிது விட்டதாக கோவையில் தீண்டாமை வன் கொடுமைகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கில் பேசினார்.
தி மு க -அ தி மு க ஆகிய இரண்டையும் சம நிலையில் வைத்து பார்ப்பது எந்த வகையில் யாருக்கு லாபம். ?
ஆளும் கட்சியாக பண பலம மாற்று;ம் ஆட்சி பலத்தோடு அ தி மு கவும் தி மு க வும் ஒன்றா?
வர்ண தர்ம சமூகம் அமைய விடாமல் தடுப்போம் என்ற நிலைப்பாட்டில் எந்த கட்சியையும் விட தி மு க உறுதியானது.
எனவே அ தி மு க விற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். அந்த சூழ்ச்சி வலையில்ஐந்து கூட்டணி கட்சிக்காரர்கள் வீழ்ந்து விட்டார்களா?
கருணாநிதி தலித்தை சம்பந்தியாக ஏற்றுக்கொண்டவர்.
அவர் தலைமையில் உள்ள தி மு க தலித்துகளுக்கு எதிராக செயல்படாது .
ஏன் இந்தக் கலப்பு திருமணத்தை வலது இடதுகள் தங்களுக்குள் கட்டாய மாக்கக்கூடாது.?
கேரளாவிலும் மே வங்கத்திலும் சாதி ஒழிந்து விட்டதா?
கொடுமைகளுக்கு ஊற்றாக இருக்கிற சாதி பிறந்த இடம் எது?
சாதி ஒழிப்பில் இலட்சியத்தோடு செயல்படுகிற தி மு க வை குற்றம் சுமத்துவது அரசியல்.
இட ஒதுக்கீட்டை மீறி பொது தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைப்பீர்களா என்கிறார்கள். தலித்துகள் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்து விட்ட பிறகு மீதமுள்ள இடங்களில் பிற்பட்டவர் போட்டியிடுவது எவ்விதம் தலித்துகளின் உரிமையை பாதிக்கும்? அவர்கள் போட்டியிட தடை ஏதும் இல்லை. நிச்சயம் உரிமை உண்டு.
ஆனால் வெற்றி வாய்ப்பு தானே அரசியல் கட்சிகளின் இலக்காக உள்ளது.?
கம்யுனிச்டுகள் குழம்பிப் போயிருக்கிறார்களா ? அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே குழப்புகி றார்களா???!!!!