காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் .
அதன்படி வடிவமைக்கபட்ட சிலையில் அப்போது கோவிலின் குருக்களாக இருந்த ராஜப்பா குருக்கள் என்பவர் சுமார் 100 கிலோ அளவுக்கு தங்கத்தை மோசடி செய்திருப்பதாக அவர் மீது இந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் காவல் துறையில் புகார் அளித்தனர்.
விசாரணை தொடங்கியவுடன் தெரிந்தது அவர் கனடாவுக்கு தப்பி சென்று விட்டது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்த நிலையில் அவர் கனடாவில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் இறங்கியவுடன் காவல்துறை கைது செய்து சென்னை சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைதவுடன் அவர் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் வயது 86.
அவர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இயல்பான உடையுடன் தான் இருக்கிறார். கொஞ்சமும் குற்ற உணர்வும் இருப்பதாக தெரியவில்லை.
விசாரணை முடிந்தபின்தான் முழு உண்மைகளும் வெளியே வரும் என்றாலும் கோவில் குருக்கள் வெளிநாடு தப்பி சென்றது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இறைப்பணி செய்பவர்கள் இறையச்சம் இல்லாதவர்களாக இருப்பது சமுதாயக் கேடு.
இதே காஞ்சிபுரம் கோவிலில் தேவநாதன் என்பவர் செய்த காம லீலைகள் ஏதோ ஒரு தனி நபரின் பலவீனம் என்று பக்தர்கள் அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கையில் அடுத்தடுத்து இறைப்பணி செய்பவர்கள் மீது வரும் குற்ற செய்திகள் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மைதானே.
சிலை செய்யும் ஸ்தபதி மீது இதே போல் புகார்கள் வருகின்றன. அவருக்கும் இறையச்சமே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது என்று கலைஞர் வசனம் எழுதினார். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா??!!