ஓடிசாவின் பிரதாப் சந்திர சாரங்கி முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்டார். பார்ப்பனர் என்பது கூடுதல் செய்தி.
64 வயதில் மத்திய அமைச்சர் ஆனது மட்டும் இவர் சாதனை அல்ல. திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம், ஓடியா ஆகிய நான்கு மொழிகளில் பேசுபவர். சொத்து சேர்க்காதவர். குடிசையில் வசிப்பவர். ஜோல்னா பையிலேயே தன் தேவைகளை அடக்கி கொள்கிறவர். சைக்கிளையே தன் வாகனமாக வைத்திருப்பவர். சுயேச்சையாகவே நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றவர். இதுபோல் பாராட்டத் தக்க குண நலன்களை கொண்டிருப்பதால் எல்லாராலும் பாராட்டப்படுகிறவர்.
ஆனால் இவர் எந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார் என்று பார்த்தால் இந்து சனாதன தர்மத்தை பரப்புவதை தன் வாழ்நாள் கடைமையாக வைத்திருப்பவர்.
ஓடிசாவில் வசித்தாலும் தன் தாய் மொழியாக சமஸ்கிரிதத்தையே பாவிப்பவர். ஓடியா தெரிந்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். எங்கு வாழ்ந்தாலும் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை மட்டுமே தங்கள் தாய் மொழியாக கருதுவார்கள். தனது முதல் பாராளுமன்ற உரையையும் இந்தியிலேயே பேசினாலும் ஆங்காங்கு சமஸ்கிருதம், ஓடியா, வங்காளி, ஆங்கிலம் என்று தெளித்து பேசியிருக்கிறார்.
கிரஹாம் ஸ்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரி மனைவி குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இவர் பெயரும் அடிபட்டாலும் வேறு சிலர்தான் தண்டிக்கப்பட்டார்கள். மதமாற்ற எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்.
சாரங்கி பெருமைக்குரிய ஸ்வயம் சேவகர் என்று அதன் சங்க சாலக் பெருமிதப்பட்டுக் கொள்வதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏன் என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதில் என்ன வியப்பு? அது அவர்கள் இயக்கம்.
அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் சுய தேவைகளை புறக்கணித்து துறந்து பார்ப்பனீயத்தை கட்டிக் காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறவர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் சேவகர்கள் தன் நலம் கருதாதாவ்ர்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர்கள் தங்கள் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். அதுதான் வேறுபாடு. மற்றவர்களை தங்கள் இனத்துக்காக இனத்தின் மேலாதிக்கத்துக்காக உழைக்கசெய்பவர்கள். அத்துடன் அதுதான் தங்கள் கடமை என்று நம்பச்செய்பவர்கள்.
பிராமணீயம் தழைப்பதன் ரகசியம் அவர்களிலே ஒரு பகுதியினர் தங்கள் இனப் பாதுகாப்பிற்காக தங்களை இழந்து உழைப்பதனால்தான்.
எந்த இனத்தில் இப்படி தங்களை இழந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
யூத இனமே கூட இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளவில்லை. ஆனாலும் உலகில் யூதர்களும் பார்ப்பனர்களும் தான் தங்கள் இன பாதுகாப்பை கடமை என கருதி உழைப்பவர்கள்.
ஏன் இவரை பார்ப்பனர் என்று அடையாளபடுத்துகிறீர்கள் என்றால் அவர் அதன் பிரதிநிதியாக செயல்படுகிறாரே ?
சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம், சமநீதி, மத சுதந்திரம், மத சார்பின்மை போன்ற எதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. எப்படி பாராட்டுவது?
அதே நேரத்தில் மற்றவர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது என்பதையும் பொதுமேடை பதிவு செய்கிறது.