ஒருவழியாக அமமுக வில் இருந்து விரட்டப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திரும்பவும் அதிமுகவுக்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கும் ஒபிஎஸ் கும் இருக்கும் பகை காரணமாக வேறு எங்கும் போக முடியாத நிலையில் திமுகவில் ஐக்கியமானாலும் அதற்கு ஒரு தத்துவ விளக்கம் கொடுத்துள்ளார் அவர்.
அதாவது அதிமுகவை இயக்குவது பாஜக என்றும் எனவே தன்மானம் இழந்து அங்கே செல்ல மனம் இடம் தரவில்லை என்றும் கூறுகிறார்.
கட்சி மாறும் எவரும் ஏதாவது சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் இவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்றால் ஒரு பாதி உண்மைதான். அதாவது அதிமுக வை இயக்குவது பாஜக தான். ஆனால் அதற்காகத்தான் நான் அங்கே செல்ல வில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது ஆய்வுக்குரியது.
ஆட்சியில் இருப்பதால்தான் இன்று அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாமல் அதிமுக என்ற கட்சி வலுவான தலைமை இல்லாமல் இயங்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது.
ஒபிஎஸ் – இபிஎஸ் என்ற இரட்டை தலைமை அதிமுகவை ஆட்சியில் இல்லாமல் இயக்க முடியுமா? அந்த ஆட்சியை பாஜக உதவியில்லாமல் தக்க வைத்திருக்க முடியுமா?
அந்தக் காரணத்தினால்தால் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள்.
ஐந்து தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தாலும் 13 தொகுதிகளில் இருந்ததை பறி கொடுத்து விட்டார்களே?
எப்படியோ அடிமைகள் கூடாரம் காலியானால் சரி!!!