அமேசான் மழைக்காடுகள் உலகின் 20% ஆக்சிஜனை தருகின்றன. ஐந்தரை லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவு. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பைப்போல் இரண்டு மடங்கு பெரியது. பிரேசில் ,பெரு , ஈக்வடார், பொலிவியா, கயானா என்று பல நாடுகளில் பரவி இருந்தாலும் பிரேசிலில் மட்டும் அறுபது சதம் காட்டின் நிலப்பரப்பை பிரேசில் கொண்டுள்ளது.
உலகின் ஒட்டு மொத்த தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மூன்றில் ஒரு பங்கு இங்குள்ளது
நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் இன்னமும் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் 73000 தீ விபத்துக்கள் என்றால் இவை இயற்கையானவையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எல்லாம் மனிதர்களின் பேராசை.
காட்டை அழித்து வேளாண்மை செய்யப் போகிறார்களாம். உலகிற்கு ஆக்சிஜனை அளித்து எங்களுக்கு என்ன என்ற எண்ணம்தான்.
உலக நாடுகள் தீயை அணைக்க உதவ தயாராக இருந்தும் வேண்டாம் என்று மறுத்து விட்டது பிரேசில். என்ன காரணம்?
ஏன் அவரவர் நாட்டில் மரங்களை வைத்து காத்துக் கொள்ளுங்களேன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
பூமிப்பந்தில் வாழும் மனிதர்கள் செய்யும் பூமியின் அமைப்பில் மாற்றம் செய்யும் காரியங்கள் ஏதோ அவர்களை மட்டுமே பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை. ஒட்டு மொத்த மனித இனத்தையே பாதிப்பதாக இருந்தால்?
அமேசான் நெருப்பு இப்போதைக்கு அணையுமா? அணைந்தாலும் மீண்டும் தொடங்காமல் இருக்குமா?