உச்சநீதி மன்றத்தில் நியாயம் கிடைக்குமா என்ற கேள்வியை சமீபத்தில் அதன் தீர்ப்பு எழுப்பியிருக்கிறது .
2006 ல் வாய்பேசாத காது கேட்காத ஒருவன் மீது ஒரு மைனர் பெண்ணை கற்பழித்ததாக புகார். அடையாள அணிவகுப்பு நடத்த வில்லை மற்றும் சந்தேகத்தின் பலன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அவனை விடுதலை செய்கின்றனர். .உச்சநீதிமன்றம் போனார் மைனர் பெண்.
” விசாரித்த ” உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளையும் 10.04.2015 அன்று ரத்து செய்து விட்டு அவனுக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை அளித்தது.
தண்டனையை நிறைவேற்ற சென்ற போலீஸ் அவன் 2012 லேயே அவனது சகோதரனாலேயே கொலை செய்யப் பட்டு விட்டதை உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கையாக அனுப்பியது.
அறிக்கையை பெற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் தனது தவறை உணர்ந்து தனது தீர்ப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கு காலாவதி ஆகி விட்டதாக ( abated ) அறிவித்தது.
அறிவித்த அமர்வில் நீதிபதிகள் பி சி கோஷ் மற்றும் ஆர் கே அகர்வால் இருந்தனர்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் இவர்கள் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.