ஆட்சிக்கு வர மந்திரம் வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ்?!

anbumani-ramadoss
anbumani-ramadoss

அதிசயம் நடக்கும் என்று ரஜினி காட்டிய பூச்சாண்டி காட்சிகள் மறையும் முன்பே அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்து விட்டார்.

“தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி நடைபெறும். யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி. என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரம் என்று இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்லுவேன்.” இதுதான் அன்புமணி பாமக இளைஞரணி கூட்டத்தில் பேசியது.

தமிழத்தின் மாற்றம் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என்று யாரும் சொல்வதில் தவறில்லை. ஆனால் அது மந்திரத்தால் முடியும் என்னும்போதுதான் கவலையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் கையில்  தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்ற கவலை பிறக்கிறதா இல்லையா?

பொறுப்புள்ள தலைவர் என்றால் மக்களுக்கு புரியும் மொழியில் பேசவேண்டும்.

ஒருவர் அதிசயம் நடக்கும் என்கிறார். மற்றொருவர் மந்திரம் இருக்கிறது என்கிறார்.

மராட்டியத்தில் பாஜக நடத்திய ஆட்சி மாற்றத்தை பாமக தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவிக்கின்றன.

ஆளும் அதிமுக ஆட்சி மீது அன்று  ஊழல் குற்றச்சாற்று சுமத்திய பாமக இன்று கூட்டணி ஆட்சிக்குவேட்டு வைக்கவும் தயாராகி விட்டது.