சிவசேனை ஆட்சிக்கு வந்தவுடன் மகாராட்டிரத்தில் இனி உள்ளூர் மக்களுக்கே 80% வேலை என அறிவித்துள்ளது.
அதிமுக அரசு இதுபற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.
மத்திய பாஜக எஜமானர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.
ஆனால் நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தை வெளி மாநிலத்தவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரியான தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும் அல்ல. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை என்பது அமுல் படுத்தப்பட்டால் பிரச்னையே வராது.
இந்நிலையில் தமிழகத்தில் வாழும் வெளி மாநிலத்தவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் அயல் மாநிலதவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் மும்பையில் முன்பு சிவசேனா போன்றவர்கள் வைத்த பழைய கோரிக்கைதான் என்றாலும் இன்றைய மத்திய பாஜக அரசு இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.
வெறுப்பை வளர்க்காமல், மத்திய மாநில அரசுப் பணிகள் தனியார் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளோர் மாநில மக்களின் உரிமைகளை பாதுகாத்திட கவனத்துடன் உடனடியாக கவனிக்க வேண்டிய அவசர பிரச்னை இது.