ரஜினியின் காமெடி தொடர்கிறது? போராட்டங்கள் பிரச்னைகளை தீர்க்காதாம்?

rajini
rajini

குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள். கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அரசுகள் அடக்கு முறையில் ஈடுபடுவதால் கலவரம் தொடர்கிறது.

பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டு காவல்துறை தடி அடி துப்பாக்கி சூடு  வரை போக வேண்டிய சூழ்நிலை.

கமல்காசன் இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்று அரசியல் என்று முன்னெடுத்தவர் இன்று திமுக நடத்தும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி பேசாமல் சூட்டிங்கில் தொடர்ந்து வேலையை பார்த்துக்கொண்டிருக்க  வேண்டியதுதானே.

வாயைத்திறந்து ஏதாவது ஒரிரண்டு வார்த்தைகள் சொல்லி  தன்னை அரசியலில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இப்போது வன்முறை போராட்டத்திற்கு தீர்வாகாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஏம்ப்பா யார் வன்முறை தீர்வு என்று சொன்னது? நீ அதை மறுப்பதற்கு.

அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் போது மக்கள் கொதித்து எழுகிறார்கள்.  அதைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு வரை போகிறது அரசு. இதற்கு  யார் காரணம்?

கருத்து சொல்ல வந்தவர் முதலில் இந்த சட்டம் பற்றிய தனது கருத்தை சொல்ல வேண்டுமா வேண்டாமா?

சொன்னால் நீ யார் பக்கம் என்று தெரிந்து விடும்.

அதை சொல்லாமல் தர்மோபதேசம் மட்டும் செய்தால் போப்பா வேலையை பாத்துட்டு என்று தான் மக்கள் உமிழ்வார்கள்.