மதத்தின் பேரால் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம்!! ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பு !! தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்துவது எப்போது???

                  சமணர்கள் என்கிற ஜைனர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கும் வழக்கத்தை சாந்தரா என்றும் சுலோகானா என்றும் அழைக்கிறார்கள்.    அது தங்கள் மதம் அனுமதிக்கிற படியால் தற்கொலை அல்ல என்றும் உரிமை என்றும் வாதிட்டு வந்தனர். 
                இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த உரிமை பற்றி மனித உரிமை ஆர்வலர் தொடுத்த வழக்கில் சமணர்களின் சாந்தரா பழக்கம் தற்கொலை முயற்சிதான் என்றும் ஆதரிப்பவர்கள் தூண்டும் குற்றத்தை புரிபவர்கள் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 
            மேலும் அரசியல் சாசனம் வாழ்வதற்கான உரிமையை வழங்கி உள்ளது.          மதத்தை ப் பின்பற்றும்  25  வது பிரிவு வாழ்வுரிமைக்கு கட்டுப்பட்டதுதான் என்றும் தொன்மையானது என்பதாலேயே அதை அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். 
             இன்னமும் தலையில் தேங்காய் உடைக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
         இன்னமும் உடன்கட்டை ஏறுவதை கூட மதத்தின் பேரால் நியாயப் படுத்துவோர் இருக்கலாம். 
          மதத்தின் பேரால் தொடரும் அர்த்தமற்ற சடங்குகளை நிறுத்தும் நேரம் வந்து விட்டது.    
         நேபாளத்தில் ஒரே நேரத்தில்  5000  எருமைகளை கொன்று குவிக்கும் மத சடங்கு நிகழ்ச்சியை அந்த நாட்டு அரசு சமீபத்தில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. 
             தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.  அரசு தலையிடுமா?   அல்லது பக்தர்களுக்கு பயந்து ஒதுங்குமா???