ரசினி -கமல் கூட்டணி அரசியலில் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு எதிராக தமிழ் நடிகர்கள் அணி திரள்வார்களா என்று தமிழர்கள் எதிர் நோக்கி இருக்கிறார்கள்.
ரசினியும் கமலும் தமிழ் நடிகர்களே தவிர தமிழர்கள் உணர்வை பிரதிபலிப்பவர்களா என்றால் நிச்சயம் இல்லை. இருவரும் மொழி இன பாதுகாப்பை பற்றி மறந்தும் கூட பேசிவிட மாட்டார்களே?!
நிராகரிக்கப் பட்ட கமல் ரசினியை ஒட்டிக் கொண்டு கரை சேரப் பார்க்கிறார்..
பாஜக அரசு என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தை எல்லாம் செய்து தனது கணக்கை துவங்க முயற்சிக்கிறது.
அதற்கு அதிமுக வை உடைத்து பாமக வை சேர்த்துக் கொண்டு ரசினி தலைமையில் ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது .
விஜய் தந்தை சந்திரசேகர் தன் மகனை அரசியலுக்கு கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறார்.
ரசினி-கமல் இணைவதை எதிர்பார்க்கிறேன் என்றவர் இப்போது அவர்கள் தமிழர் எதிரிகள் என்பது போல் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
இப்போது மார்க்கெட் இருக்கும் தமிழ் நடிகர்கள் அரசியலில் கால் வைத்து எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
ஆனால் வயதான காலத்தில் மார்க்கெட் இருக்கும்போதே அரசியலிலும் வணிகம் செய்ய துணிந்து விட்டார்கள் ரசினியும் கமலும்.
இதை பார்த்துக் கொண்டு தமிழ் நடிகர்கள் சும்மா இருக்கலாமா?
அவர்கள் வந்தால் இவர்களும் எதிர் அணியில் வரத்தான் வேண்டும்.
அதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பு!